பாசிப்பருப்பு அவரைக்காய் கூட்டு.! வித்தியாசமாக செய்து அசத்துங்கள்.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்: 

பாசிப்பருப்பு - கால் கப்
அவரைக்காய் - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பொடித்த மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காய்த் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்த் துருவல் - கால் கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

நன்றாக அவரைக்காயைக் சுத்தம் செய்து, பொடி, பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

அத்துடன், பாசிப்பருப்பு, சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். 

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்னர் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து வையுங்கள். 

வேகவைத்த அவரைக்காய்க் கலவையை அதில் சேர்த்துத் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். 

எல்லாம் சேர்ந்து கூட்டு பதம் வந்த பின்னர் தேங்காய்த் துருவல் மற்றும் கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி விடுங்கள்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avarakai poriyal preparation in tamil 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->