குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான உணவு..! இப்படி செய்து பாருங்கள்.!  - Seithipunal
Seithipunal


காலையில் எழுந்தவுடன் இன்று காலை டிபன் என்ன சமைக்க போகிறோமோ என்று கவலைப்படாமல், எளிதில் சமைக்கக்கூடியதும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும் அவல் மற்றும் காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்யலாம். இப்போது இந்த அவல் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

அவல் - 4 கப்
பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
கேரட் - 1 கப் (நறுக்கியது)
பீன்ஸ் - 1 கப் (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
இலவங்கம் - 5
ஏலக்காய் - 4
பட்டை - 1 துண்டு
சோம்பு - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் நன்றாக அவலைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் சோம்பு, பட்டை, இலவங்கம், ஏலக்காய் போட்டுத் தாளிக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு காய்கறிகள், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடலாம்.

கடைசியாக காய்கறிகள் வெந்ததும், அதில் அவலைப் போட்டுக் கிளற வேண்டும். அவல் உதிரியாக வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான அவல் பிரியாணி தயார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aval biryani recipe in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->