அத்திப்பழத்தில் அல்வா செய்து சாப்பிட்டு., எக்கச்சக்க எனர்ஜி பெறுங்கள்.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் - அரை கிலோ
சர்க்கரை - தேவைக்கேற்ப
முந்திரி - 8
பிஸ்தா - 8
பேரிச்சம் பழம் - கால் கிலோ
பாதாம் - 8
பால் - 2 கப்
நெய் - தேவைக்கேற்ப.

செய்முறை :

அத்தி பழம், பேரிச்சம் பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பாதாம், முந்திரி, பிஸ்தா மூன்றையும் பாதி பொடியாகவும் மீதி பாதியை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

பாலை தனியாக காய்ச்சி எடுத்து பாதியாக பிரித்து கொள்ளவும்.

அத்தி பழம், பேரிச்சம் பழத்தை துண்டுகளாக நறுக்கிய பின்னர் அதை காய்ச்சிய ஒரு கப் பாலுடன் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பழங்கள் ஊறிய பின் அதை மிக்ஸியில் போட்டு அரைத்த விழுதை மீதம் உள்ள பாலில் போட்டு நன்றாக காய்ச்சவும். பால் வற்றி வரும் போது சர்க்கரையை சேர்த்து கிளறி பின் பொடியாக நறுக்கிய பருப்புகளையும் அதோடு சேர்த்து கிளறவும்.

நல்ல கெட்டியாக வரும் போது தீயை மிதமானதாக வைத்து நெய்யை சேர்த்து கிளறிவும். பின் நீளவாக்கில் நறுக்கிய பருப்புகளை சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான அத்திபழ அல்வா ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Athi halwa preparation 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->