இளம்பெண்கள் இருக்கும் வீட்டில் அரிசி கழுவிய நீரை தூக்கி ஊத்தாதிங்க.! முக்கிய தகவல்.!  - Seithipunal
Seithipunal


அரிசி கழுவிய நீரின் நன்மைகள்:

இந்தியாவில் பாரம்பரிய உணவு தான் அரிசி. அந்த அரிசி கழுவிய நீரானது, இந்தியாவின் பல பகுதிகளில் அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதனால் பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. மேலும் ஆய்வுகளிலும் அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.  

பயன்படுத்தும் முறைகள்

முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம். சரும சுருக்கம் அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும். 

அதற்கு காட்டனை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். பொலிவான முகம் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

மென்மையான கூந்தல் கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

அதேபோல் இந்த ஊற வைத்த அரிசி நீரைப் புளிக்கச் செய்து அதில் கொஞ்சம் நீர் கலந்து தலைக்குத் தேய்த்தாலும் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். நீங்கள் தலைக்குக் குளித்தபின் இறுதியாக இந்த தண்ணீரை ஒரு ஜக் தலையில் ஊற்றி அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arisi kaluviya thanni payankal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->