மாஸ்க் அணியுமாறு கூறிய காவலரின் மண்டையை உடைத்த நபர்.. பழையதை மறந்து தவிக்கும் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் காவல்துறையினர் தினந்தினம் வாகன ஓட்டிகள் மூலம் பல மிரட்டுகளை சந்தித்து வருகின்றனர். 

இந்நிலையில், மூணாறு அடுத்த மறையூர் காவல் துறையினர் கடந்த 1 ஆம் தேதி காந்தலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒருவர் முக கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அவரை அழைத்து முக கவசம் அணியாமல் செல்வதால் கொரோனா காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூறியதோடு, அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது .

அபராதத்தை கட்ட மறுத்து வாக்குவாதம் செய்த அந்த நபர் போலீஸாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். அவரை இரு காவலர்கள் பிடிக்க முயன்ற போது கீழே இருந்த கல்லை எடுத்து ஆஷிஷ் என்ற காவலரின் பின் மண்டையில் தாக்கியுள்ளார். இதனால் காவலர் ஆஷிஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். மற்ற காவலர்கள் ஆஷிஷ்யை தூக்க முயன்ற நிலையில், மாஸ்க் அணிந்த நபர் தப்பி ஓடிவிட்டார். மண்டை உடைந்து ரத்தம் வெள்ளத்தில் கிடந்த காவலர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்ட சுய நினைவு திரும்பாத நிலையில் மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 6 நாட்களுக்கு பின்பு சுயநினைவு திரும்பிய நிலையில் ஆஷிஷ் குடும்பத்தினரும், உடன் பணிபுரிந்த காவலர்களும் அவரை பார்க்க சென்றபோது அவரும் ஒருவரை கூட  அடையாளம் தெரியலை. ஆஷிஷ்க்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தயது. இதையடுத்து நண்பர்கள், உயர் காவல் அதிகாரிகளும் செல்போன் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பழைய நினைவுகளை மீட்டு எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man attacked police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->