மலேசியாவில் விற்கப்பட்ட இளைஞர்கள்.! கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மலேஷியாவில் விற்பனை செய்ததாக கூறி உதவி கேட்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ பதிவில் அவர்கள் கூறியதாவது :-  தாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்து கிரிஜா எனும் ஏஜண்ட் மூலம் பனசோனிக் கம்பெனியில் பேக்கிங் வேலைக்காக மலேஷியா வந்ததாகவும் இரண்டு இளைஞர்கள் கூறுகின்றனர்.

இதை தொடர்ந்து, மலேஷியாவிலிருந்த கிரிஜாவின் கணவர் தங்களை இங்கு வேறொரு ஏஜண்டிடம் அவர்களை விற்றுவிட்டதாகவும் கூறினார்கள், இப்படியாக பல ஏஜண்டுகள் கைமாறி கொண்டே இருப்பதாகவும், சரியான உணவு, அடிப்படை வசதிகள் இல்லாமல் , கடினமான வேலை செய்து மிகவும் சிரமப் படுவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

அவர்களுடன் வந்த மற்ற 5 பேரும் மலையாள அசோசியேஷனை சேர்ந்த சிலர் மூலம் ஊருக்கு திரும்பி விட்டதாகவும், தங்களின் பாஸ்போர்ட்டை ஏஜண்ட்டிடமிருந்து கைப்பற்றி தங்களை மீட்க வேண்டுமென்றும் அந்த இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதை தொடர்ந்து அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த அனிஷ் மற்றும் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்று தெரிய வருகிறது. இந்த வீடியோவைக் கொண்டு அவர்களது உறவினர்கள் காவல் துறையை நாட உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young boys sold in malasia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->