யெஸ் வங்கி நிறுவனரின் மீது ஆப்பு மேல் ஆப்பு வைக்கும் அமலாக்கத்துறை.. வைத்து செய்யும் நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த யெஸ் வங்கியானது கடந்த 2004 ஆம் வருடத்தில் துவங்கப்பட்டது. இந்த வங்கி கடந்த 14 வருடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளுடனும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செய்யப்பட்டு வந்தது. 

மேலும், இந்தியாவின் 5 ஆவது மிகப்பெரிய தனியார் வங்கி என்ற பெருமையுடன் இருந்து வந்தது. இந்த வங்கியின் நிறுவனரான ராணா கபூர் (வயது 62) என்பவர் இருக்கிறார். நன்றாக இயங்கி வந்த யெஸ் வாங்கி, இம்மாத துவக்கத்தில் வராக்கடன் பிரச்சனையில் ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டது.

இந்த செய்தியை அறிந்த இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் செய்வதறியாது திகைக்கவே, தங்களது கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க இயலும் என்று உத்தரவிட்டது. மேலும், சட்டவிரோதமான பணபரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்த ராணா கபூரை கடந்த 8 ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.  

மேலும், இவர் பல ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்திடம் இலஞ்சம் வாங்கிவிட்டு அதிக கடன் கொடுத்து வந்தது தெரியவந்ததை அடுத்து, விசாரணை காலம் நிறைவு பெற்றதால் மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சமர்ப்பித்தது. இந்த நேரத்தில், ராணா கபூர் நீதிபதி முன்னிலையில் ஆஸ்த்துமா மற்றும் மன அழுத்த பிரச்சனை இருப்பதாக கூறியிருந்தார். இவரின் மீதான குற்றசாட்டு வலுவாகியுள்ளதால் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று வரும் 20 ஆம் தேதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yes bank chairman police custody increased 3 days for investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->