இந்திய - சீன எல்லையில் 5 ஆயிரம் வீரர்கள்..! விரையும் போர் விமானங்கள்..!! வெளியான அதிரடி தகவல்கள்..!! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள்., இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும்., சர்வதேச அளவில் இந்திய நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கிய இரு நாடுகளுக்கும்., பெரும் ஏமாற்றமே இறுதியில் காத்திருந்தது. 

அமெரிக்கா அவ்வப்போது இந்தியாவிற்கு சாதகமாக பேசி வந்தாலும்., சில சமயத்தில் எதிராகவும் பேசி வருகிறது. இதனை கருத்தில் கொண்ட இந்திய அரசு., எதிர்காலத்தில் எந்த விதமான பிரச்சனை வந்தாலும் அல்லது உருவாகினாலும் அதனை முழு பலத்துடன் எதிர்கொள்வதற்கு., இந்திய இராணுவத்தின் கட்டமைப்பில் பலத்தை தொடர்ந்து அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த முயற்சியின் பகுதியாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா., பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து அதிநவீன போர் விமானங்களை தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. மேலும்., முப்படைகளையும் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.9.34 இலட்சம் கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உலகளவில் தலை சிறந்த இராணுவ நாடாக திகைத்து வரும் இந்தியா., இராணுவத்திற்கு மேலும் பலத்தை அதிகரித்துள்ளது. 

இந்த சமயத்தில்., பாகிஸ்தான் அரசும் இந்தியாவை மிரட்டும் பாணியில் பேசி வரும் நிலையில்., சீனாவும் பாகிஸ்தானின் பேச்சிற்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த ஆதரவை போன்று எல்லையில் அத்துமீறி நுழையும் செயலும் அரங்கேறி வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும் வகையில்., இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு தகுந்த பாடம் புகட்ட முடிவு செய்துள்ளது. 

இந்த திட்டத்தின் பகுதியாக., சீன - இந்திய எல்லைக்கு அருகேயுள்ள அருணாசல பிரதேசம் மலைப்பகுதியில் வரும் மாதத்தில் போர் ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையில் சுமார் 5000 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் என்றும்., இந்த ஒத்திகையில் விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்., மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பக்தூரிய இராணுவ முகாமில் இருக்கும் இராணுவ வீரர்களை போர் முனைக்கு அன்புதான்., பீரங்கி மற்றும் இராணுவ தளவாடங்களை போர் முனைக்கு நகர்த்துதல் போன்று., நிஜ போரினை எதிர்கொள்வது போல் ஒத்திகை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சீன வயிற்றெரிச்சலுடன்., வயிறு கலங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world war experimental training for Indian army at India china border


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->