ஏர்கலப்பையில் பெண்களை வைத்து செய்யும் காரியமா இது.! அடக்கடவுளே.!! - Seithipunal
Seithipunal


தண்ணீர் பஞ்சம் நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. பல்வேறு கிராமங்களிலும், முக்கிய நகரங்களிலும் தண்ணீர் இன்றி மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் செய்து வருகின்றனர். அரசு சார்பிலும், பல சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் மழை வேண்டி பெண்கள் வித்தியாசமான பூஜையில் ஈடுபட்டுள்ளனர். எருதுகளை பூட்டி ஏர் உழும் கலப்பையை பெண்கள் தங்கள் தோள்களில் சுமந்து நிலத்தை உழுகின்றனர். 

இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது மழை வேண்டி நாங்கள் நிலத்தை உழுகிறோம். பல காலங்களுக்கு முன்பிருந்தே பெண்கள் ஏர் பிடித்து உழுவதால் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை நிலவி வருகின்றது. பல நூற்றாண்டுகளாக பருவமழை பொய்த்துப் போகும் காலத்தில் இதுபோல தான் வருண பகவானை வேண்டி பெண்கள் ஏர் உழும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது." என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women pray for rain in mp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->