நள்ளிரவில் அத்துமீறிய அமைச்சர் மகன்.! தட்டிக்கேட்ட பெண் போலிஸ் வேலை பறிபோனது.!  - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பாக, குஜராத் மாநிலத்தில் நள்ளிரவு நேரத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதால், மந்திரி மகன் மற்றும் அவரது நண்பர்களை பெண் காவலர் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

இதனை தொடர்ந்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது, அவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மந்திரி மகனுடன் அவர் நேர்மையாக வாக்குவாதம் செய்ததை கண்ட பலரும், 'அரசியல் பலத்தை கண்டு அஞ்சாமல், தனது பணியை செவ்வனே செய்த பெண் போலீசை பாராட்டினார். மேலும், அவரை 'லேடி சிங்கம்' என்றும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்தனர். 

இந்த நிலையில் சுனிதா என்கிற அந்த பெண் போலீஸ் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக விரும்புவதாகவும், ஒருவேளை ஐபிஎஸ் தேர்வில் நான் தேர்ச்சி அடையா விட்டாலும் கூட மக்களுக்கு உதவும் வகையில் வழக்கறிஞராகவும் அல்லது ஊடகவியலாளராகவும் வாழ விரும்புவதாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women police resign her job 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->