20 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்., அதில் 15 குழந்தைகளை எங்கு பெற்றெடுத்தார் தெரியுமா? வியந்து போன மருத்துவர்கள்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முதலில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற பிரசாரம் முழங்கியது. ஆனால் இப்பொது ஒரு குழந்தையே போதும் என வலியுறுத்தப்படுகிறது. பிரதமர் மோடியும் இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கம் பற்றி தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சில தம்பதிகள்  பல குழந்தைகளை பெற்றெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 16 குழந்தைகளை பெற்றெடுத்து விட்டு தற்போது 17-வது பிரசவத்திற்காக தயாராகி விட்டார். 

பீட் மாவட்டம் மஜால்காவ் தாலுகா கேசபுரி கிராமத்தை சேர்ந்த 38 வயது பெண் லங்காபாய் காரத். அங்குள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்திருந்தபோது தான், அவர் தஹ்ரபோது 17-வது குழந்தையை பிரசவிக்க இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

லங்காபாய் காரத் முதன் முதலில் கர்ப்பமாகிய போது மருத்துவமனைக்கு வந்து முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதற்கு பிறகு பலமுறை கர்ப்பமாகிய அவர் ஒருமுறை கூட மருத்துவமனை பக்கமே தலைகாட்டவில்லை. முதல் பிரசவத்துக்கு பின்னர் அடுத்தடுத்து நடந்த 15 பிரசவத்தையும் வீட்டிலேயே முடித்து விட்டார். இதனால் அவரது பிரசவ கதை பற்றி வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில், 17-வது குழந்தையை பெற்றெடுக்க தயாரான அந்த பெண் வயிறு வலியின் காரணமாக மருத்துவமனைக்கு வந்ததாக தெரிவித்த மாநகராட்சி மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். 7 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணும், வயிற்றில் வளர்ந்து வரும் சிசு நலமாக இருப்பதாகவும் அந்த மருத்துவர் தெரிவித்தார். 20 குழந்தைகளுக்கு பெற்றெடுத்த அவர் அதில் 15 குழந்தைகளை வீட்டிலே பெற்றெடுத்து மருத்துமனையில் இருந்த மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

லங்காபாய் காரத்துக்கு தற்போது 11 குழந்தைகள் உயிருடன் உள்ளனர். மற்ற 5 குழந்தைகள் இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது. அவர் இதுவரை 20 தடவை கர்ப்பமடைந்ததும், 3 தடவை கருச்சிதைவு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

திருமணத்தின் போது 16 பெற்று பெருவாழ்வு வாழ்க என பெரியோர்கள் ஆசி வழங்குவது உண்டு. ஆனால் லங்காபாய் காரத் 16 செல்வத்துக்கு பதில் 16 குழந்தைகளை பெற்றெடுத்து 17 வது பிரசவத்துக்காக காத்திருக்கிறார். இந்த தடவை பிரசவத்துக்காக நிச்சயம் மருத்துவமனையில் சேர வேண்டும் என மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman who gave birth to 20 children


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->