கோழிக்கோடு : தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக பெண் போலீஸ் அதிகாரி மீட்பு.! - Seithipunal
Seithipunal


கேரள கோழிக்கோடு அருகே பெண் போலீஸ் அதிகாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குங்குமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பீனா (46) கோழிக்கோடு பேராம்பரா காவல் நிலையத்தில் உதவி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பணிக்குச் சென்ற பீனா மாலை 4 மணி அளவில் மகனை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து மீண்டும் பீனா பணிக்கு வரவில்லை என்பதால் அதிகாரிகள் பினாவை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரிடம் பேச முடியாததால் சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது பீனாவீட்டின் பின்புறத்தில் உள்ள கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பீனா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman police officer found dead after hanging in Kozhikode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->