தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் பாஜகவை கழட்டி விட காரணம் இது தானா?! தாமரைக்கு வந்த சோதனை!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழியிலேயே பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், விருப்பப்படும் எந்த கட்சி வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணி வைக்கலாம் என்றும், பழைய நண்பர்களை உடன் இணைத்து கொள்ள பாஜக விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதற்கு கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், " மோடியின் அழைப்பை நிராகரிக்கும் பொருட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என்றும், அதேபோல் மோடி ஒன்றும், வாஜ்பாயும் அல்ல என்றும்" கூறி மறுப்பு தெரிவித்தார். மேலும், திமுக கடைசியாக 1999-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தி.மு.க. இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, " அதிமுக பாஜக இடையே கூட்டணி நிச்சயம் கிடையாது. ஆட்சியில் தான் தொடர்பு உள்ளதே தவிர இது அரசியல் கூட்டணி கிடையாது. பாஜகவின் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  திராவிட கட்சிகள் ஊழல் கட்சிகள் என்றும், முதல்வரை செயல்படாதவர் என்றும் குறை கூறி கொண்டே இருக்கிறார். எனவே, அதிமுக - பாஜக இடையே கூட்டணி என்ற பேச்சுக்கு இடமிருக்க வாய்ப்புகள் இல்லை" என நிராகரித்துள்ளார்,

இவ்வாறு, தமிழகத்தின் முக்கிய காட்சிகளாக பார்க்கப்படும்  திமுக, அதிமுக என இருக்கட்சிகளும், பாஜகவின் கூட்டணியை நிராகரிக்க காரணம் மக்களுக்கு பாஜகவின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியினால் சொந்த கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்ற அச்சத்தினால் தான் என்றும், 

மேலும், தற்பொழுது ஐந்து மாநில தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவும் தான் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் நிலை தமிழகத்தில் கேள்வி குறியாகுமா? என்ற கருத்து அனைவருக்கும் ஏற்படுகிறது. 

English Summary

why all tn party ignoring bjp


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal