3 ஆவது அலையை வரவிடாமல் சுதாரித்துக்கொள்ளுங்கள் - WHO உச்சகட்ட எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. 

கொரோனா வைரஸின் முதலாவது உச்சகட்ட அலை செப்டம்பர் மாதம் எட்டிய நிலையில், நாளொன்றுக்கு சுமார் 97 ஆயிரம் பேர் வரை அதிகபட்சமாக பாதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கொரோனா படிப்படியாக குறைத்து வந்தது. 

இதனையடுத்து, இரண்டாவது அலைபரவல் அதிவேகமாக பரவிய நிலையில், கடந்த 6 ஆம் தேதி அதிஉச்சமாக சுமார் 4.14 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து, நாளுக்கு நாள் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில், சுமார் 2 இலட்சம் பேருக்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவானது. 

முதல் அலையின் உச்சத்தையும், இரண்டாவது அலையின் உச்சத்தையும் கணக்கில் கொண்டால், அது பன்மடங்கு உயர்வாக கருதப்படுகிறது. இந்த பாதிப்புகளை விட மூன்றாவது அலை இந்தியாவில் பரவும் பட்சத்தில், அது பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

மூன்றாவது அலை குழந்தைகளை அதிகளவில் தாக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், மூன்றாவது அலையை கணிக்க இயலாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் மருத்துவர் பூனம் கேதர்பால் தெரிவித்தார். 

இது தொடர்பான பேட்டியில், " இந்தியாவில் அதிவேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ், சுகாதார சேவைகளுக்கு பெரும் சுமையினை வழங்கியுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா குறைந்து வருகிறது என்றாலும் சூழ்நிலை சவாலான கட்டத்திலேயே இருக்கிறது. 

இதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நாம் கட்டாயம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸின் மூன்றாவது அலை என்பதை கணிக்க இயலாது. ஆனால், அதனை நாம் தடுக்க இயலும். அதனை கட்டாயம் நாம் செய்தாக வேண்டும். இல்லையென்றால் பெரும் துயரம் ஏற்படும் " என தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO Asia Admin Warn Corona Third Wave India Fast Inject Vaccine to Control Corona 3 rd Wave


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->