வாட்ஸப்பில் வதந்தி.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு அத்தியாவசிய தேவைகளை விடுத்து வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 நபர்களுக்கு மேலே ஒரு இடத்தில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மத ரீதியான பூஜைகள் மற்றும் ஆலய வழிபாடுகள் போன்றவை அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் வதந்தி போன்றவை பரப்பக்கூடாது என்றும் அரசு எச்சரித்தது. 

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய நபர்களை காவல் துறையினர் கைது செய்த நிலையில், தற்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பஹாரியா பகுதியை சார்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முகமது சமீது என்ற நபர் இணையத்தில் கரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவலை பரப்பிய நிலையில், இந்த விஷயத்தை கண்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app roomer person arrest by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->