மானம் போச்சே.. மருவாதி போச்சே.. காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு.? ஒன்று கூடும் எதிர் சக்திகள்.! - Seithipunal
Seithipunal


அமேதி தொகுதியில் தனக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய அமேதி தொகுதிக்கு ஒரு குழுவை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இன்று கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பதால், 10 சதவிகித இடத்தை கூட பெறாமல் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறமுடியவில்லை.

இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், பதவி விலகும் முடிவில் ராகுல் காந்தியும் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாக 5 எம்.பி.க்களைக் கொண்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியோடு இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதன் மூலம் மக்களவையில் 57 எம்.பி.க்களை பெற்று எதிர் கட்சி அந்தஸ்து பெறும். அப்படி இணைக்கப்பட்டுவிட்டால் காங்கிரஸ் தலைவர் பதவியை சரத்பவாருக்கு வழங்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what-is-the-congresss-plan-to-get-opposition-status


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->