வீடியோ: 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரிந்த இளம்பெண்.. காரை நிறுத்திய போலீஸ்.. நாகரிகமற்ற செயலை செய்த பெண்.! - Seithipunal
Seithipunal


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் 657 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. மேலும் இந்த வைரசுக்கு இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஊரடங்கு உத்தரவு அத்தியாவசிய காரணங்கள் தவிர மற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவுவதை பொருட்படுத்தாத சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் பயணம் செய்தல், காரணமின்றி பொது இடங்களுக்கு வந்து செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை காவல் துறையினர் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். 

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 144 தடை உத்தரவை மீறி காரில் சுற்றி திரிந்த இளம்பெண்ணை போக்குவரத்து காவலர் நிறுத்தியதால், போக்குவரத்து காவலர்கள் கையை அந்த இளம்பெண் கடித்துள்ளார். மேலும் தன் கையிலிருந்த காயத்தைக் கையால் தேய்த்து அந்த ரத்தத்தை அவர் மீது பூசி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்ணின் செயலுக்கு இணையத்தில் பலதரப்பு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west bengal police who warned woman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->