துர்கா பூஜைக்காக செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


துர்கா பூஜைக்காக வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் என கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு, துர்கா பூஜையை முன்னிட்டு அனைத்து பூஜை குழுவினருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதற்கு முந்தின ஆண்டும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. 

கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக இந்த தொகையை மம்தா பானர்ஜி ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச உரிமங்கள் மற்றும் 50 சதவீத மின் கட்டணத்தில் தள்ளுபடி உள்ளிட்டவையும் கடந்த ஆண்டு சலுகைகளாக அறிவிக்கப்பட்டன. 

இந்த நிலையில், 3-வது ஆண்டாக நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவியை பெறுவார்கள் என பானர்ஜி அறிவித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Durga Pooja one week holiday


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->