மேற்குவங்கம்: தேர்தலில் கலவரம்.. பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்கள் ஒரேகட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கம் மாநிலத்தை பொறுத்த வரையில், அங்கு அதிகளவு வன்முறை மற்றும் கலவரம் நிகழலாம் என்பதால் பலகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், 3 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் போது அங்குள்ள பேகளா பகுதியில் கலவரம் ஏற்பட்டது. பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோத தொடங்கினர்.

இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் எதிர்தரப்பு வேட்பாளரின் உயிருக்கு அச்சம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் கூட்டத்தினை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த பகுதியில் வாக்குப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி கூடுதல் காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal 4 th Level Poling Violence Encounter 4 Died 10 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->