கட்டு கட்டாய் கோடி கணக்கில் ரூ.500 கள்ள நோட்டுகள்! மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தமாகாளி படகுப் பாதையில் இருந்து சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுகள் மீட்கப்பட்டன.

இந்த தொடர்பாக சிராஜுதீன் மொல்லா மற்றும் தேபப்ரதா சக்ரவர்த்தி என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். வெள்ளிக்கிழமை இரவு இருவரும் தமாகாளி பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தனர். அருகிலுள்ள கடையில் வாங்கிய பொருட்களுக்கு செலுத்திய பணத்தில் சந்தேகமடைந்த கடைக்காரர், நோட்டுகள் போலியானவை என்று உணர்ந்து போலீசுக்கு தகவல் அளித்தார்.

பின்னர் விரைந்து வந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து சில அசல் இந்திய மற்றும் நேபாள ரூபாய்களும், போலி நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.

மேலும் சிராஜுதீனிடம் இருந்து இரண்டு ஆதார் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது இந்த இருவரும் தீவிர விசாரணையில் உள்ள நிலையில், இந்த வலையமைப்பில் மேலும் எத்தனை பேர் தொடர்புடையவர்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

west bangal fake 500 rupee notes


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->