தமிழகத்தில் 15 நாட்களுக்கும் முழு ஊரடங்கு.. வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மேலும், இரவு நேரங்களில் ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருந்தபோதிலும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், மால்கள், தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுயிருக்கும். சுற்றுலாத்தலங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கொரோனாவை தடுக்க 15 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பித்தால் முழுமையான அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம். 

ஆனால், இதனால் பாதிக்கக்கூடிய வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சிறு சிறு கடைகளுக்கு காவல்துறையினர் அதிக அபராதத்தை விதிக்கின்றனர். தமிழக அரசு இதனை தடுத்திட வேண்டும். அன்றாட  பொது மக்களுக்கு அரசே மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikramaraja says about 15 full lockdown


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->