சிறுகுழந்தையை காப்பாற்ற பரிதவித்த கேரள தம்பதிகள்.! கரம்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.! - Seithipunal
Seithipunal


ஊரடங்கு காரத்தில், குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்த கேரள தம்பதிக்கு, கேரள முன்னாள் முதல்வரும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் உதவி செய்துள்ளது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கும்பநாடு பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கு, டீனா என்ற மனைவி இருக்கிறார். சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 7 நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில் குழந்தை தினமும் அழுது கொண்டே இருந்துள்ளது. 

இதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அதற்கு முதுகு தண்டுவட பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால், இதை கேரளாவில் சரிசெய்ய முடியாது என்று கூறி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். 

மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டுமானால், கண்டிப்பாக இ-பாஸ் வேண்டும். இதையடுத்து குழந்தையை தமிழகத்திற்கு கொண்டு வர கோரி பெற்றோர்கள் இ-பாஸிற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இ-பாஸ் கிடைக்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து அவர்கள் முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டியை அணுகியிருக்கின்றனர். அவர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சருடன் பேசி முறையாக இ-பாஸ் கிடைக்க உதவி செய்துள்ளார். 

இதையடுத்து இரவு 10 மணிக்கு குழந்தையுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை அறிந்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வழி ஏற்படுத்தப்பட்டு பிற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. எனவே, அங்கிருந்து 10 மணி நேரத்தில் அவர்கள் மருத்துவமனையை வந்தடைந்தனர். இதை எடுத்து மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்த பெற்றோருக்கு கேரள முன்னாள் முதல்வரும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayabasker helps to Kerala parents to save their children 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->