12 தேர்தல்.. 10 வெற்றி.. 2 தோல்வி.. காட்பாடி தொகுதியில் துரைமுருகன் சாதனை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, விரைவில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை அமைப்பதற்கான வழிகளை மேற்கொண்டு வருகிறது. 

நேற்று மாலை பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்ததை தொடர்ந்து, மாலை முதலாகவே மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் வர தொடங்கியது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக 75 கூட்டணி தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது. 

இந்நிலையில், திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் இறுதி நேரத்தில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாத்தில் வெற்றியை அடைந்தார். துரைமுருகன் அரசியலில் களமிறங்கிய பின்னர் திமுக சார்பில் கடந்த 1971 ஆம் வருடம் போட்டியிட்டு வெற்றியை அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 1977 மற்றும் 1980 தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியையும் அடைந்தார். பின்னர், கடந்த 1984 ஆம் வருடம் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், கடந்த 1989 ஆம் வருடம் காட்பாடியில் களமிறங்கி வெற்றியை அடைந்தார்.

பின்னர், கடந்த 1991 ஆம் வருடம் நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் கலைச்செல்வியிடம் மீண்டும் துரைமுருகன் தோல்வியடைந்த நிலையில், இதற்குப்பின் எந்த தோவியையும் துரைமுருகன் சந்திக்கவில்லை. கடந்த 1996, 2001, 2006, 2011, 2016 ஆம் வருட தேர்தல் என ௫ முறை தொடர்ந்து வெற்றிகண்ட நிலையில், தற்போதும் காட்பாடி தொகுதியில் 10 ஆவது முறையாக 2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டார்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் 85,140 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், சுமார் 746 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றியடைந்தார். ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளுடன் துரைமுருகன் வெற்றியை அடைவது இதுவே முதல் முறை. மேலும், காலையில் இருந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி உறுதியானது. 

தனது வாழ்க்கையில் சந்தித்த 12 தேர்தலில் 10 தேர்தலில் துரைமுருகன் வெற்றியை அடைந்துள்ளார். மேலும், தற்போதையை வெற்றி தொடர் ஆறாம் முறை வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Katpadi DMK Candidate Durai Murugan Election History Tamil 3 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->