வல்லபாய் படேல் சிலையை பார்க்க இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும் இரயில்..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள மிக உயர வல்லபாய் படேல் சிலை, அங்குள்ள கேவாடியா பகுதியில் அமைந்துள்ளது. கேவாடியா செல்ல தற்போது சென்னை, வாரணாசி, மும்பை, அகமதாபாத், டெல்லி, ரேவா ஆகிய நகரங்களிலிருந்து விரைவு இரயில்கள் இயக்கப்பட உள்ளது. 

இதனை போன்று குஜராத்தின் பிரதாப் நகர் - கேவடியா இடையே இரண்டு மின்சார இரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த எட்டு இரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 

இதனைப் போன்று, பிரதாப் நகர் - கேவடியா இடையிலான அகல பாதை மற்றும் மின்மயமாக்கப்பட்ட இரயில் பாதை ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார். இந்த வழித்தடத்தில் உள்ள புதிய இரயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார். இதனால் நர்மதை மாவட்டத்தில் சமூக பொருளாதார நிலை மேம்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vallabhbhai Patel Statue Gujarat Train Services from Different Indian States


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->