மணற்கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிக்கு அரங்கேறிய கொடூரம்...! - Seithipunal
Seithipunal


"உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் சட்டவிரோத மணல்கொள்ளையை தடுக்க முயர்ச்சித்த போலீஸ் கான்ஸ்டபிள், டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டு இருக்கின்றார்.

இன்று அதிகாலை ஆக்ராவில் நடைபெற்ற சட்டவிரோத மணல்கொள்ளையை தடுக்க முயற்சித்த காவலர் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்துள்ளனர்.. கொலை செய்யப்பட்ட காவல் அதிகாரி, 2019 பேட்ஜை சேர்ந்த அலிகாரை சோனு சவுத்ரி. 

இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் இவர் ரோந்து பணிக்கு சென்றபோது மணல் திருடிய கும்பல் டிராக்டருடன் தப்ப முயற்சித்துள்ளனர். அதனை விரட்டிப்பிடிக்க காவலர் ஓடியபோது இவர்மீது டிராக்டரை ஏற்றி இருக்கின்றனர். 

இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னர், அனைத்து உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இறந்தவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது. மேலும் விசாரணையைத் துவங்கியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Police Officer Murder due to Sand Smuggling


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->