இரட்டையர்கள் மரணத்திலும் இணைபிரியாத சோகம்.. கொரோனாவின் கோரத்தால், கண்ணீரில் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை, இந்தியாவை மீண்டும் உலுக்கி பெரும் துயருக்கு உள்ளாக்கியுள்ளது. பலரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவித்து வரும் நிலையில், இரட்டை சகோததர்கள் மரணத்திலும் இணை பிரியாமல் இருந்த சோகம் நடந்துள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சார்ந்த இரட்டை சகோதரர்கள் ஜோபிரேட் வர்கீஸ் கிரிகோரி - ரால்பிரெட் ஜார்ஜ் கிரிகோரி. இவர்கள் இருவரும் 3 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை சகோதரர்கள் ஆவார்கள். 

இவர்கள் இருவரும் ஒன்றாக பிறந்து, வளர்ந்து, படித்து பொறியியல் பட்டதாரி ஆகியுள்ளார். கடந்த மாதம் 23 ஆம் தேதி சகோதரர்கள் இருவரும் தங்களின் 24 வயது பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடி இருக்கின்றனர். 

இந்நிலையில், கடந்த மே 1 ஆம் தேதி இருவரையும் கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இருவருக்கும் கடந்த மே 10 ஆம் தேதி சிகிச்சைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில், கொரோனா இல்லை என்ற முடிவு வந்துள்ளது. 

கொரோனா இல்லை என்றாலும் உடல்நலம் குறைந்தே காணப்பட்டதால் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, ஜோபிரேட் வர்கீஸ் கிரிகோரி கடந்த 13 ஆம் தேதி இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  ரால்பிரெட் ஜார்ஜ் விடிய விடிய உயிருக்குள் போராடி சூரியன் உதிக்கும் நேரத்தில் இறந்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளால் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்த இரட்டை சகோதரர்கள் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டாலும், நுரையீரலில் தொற்று அதிகரித்து இருவரும் பலியானது குடும்பத்தை பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Meerut Twin Brothers Died Corona Virus 19 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->