17 வயது சிறுமியை இரண்டாவது மாடியில் இருந்து கீழே வீசும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.. பதைபதைப்பு வீடியோ.!  - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமியை கொடூரர்கள் இரண்டாவது மாடியில் இருந்து கீழே வீசும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரை சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் 17 வயது சிறுமியை ஒரு வருடமாக பின் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. 

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர்கள், சிறுமியின் தாய், தந்தை மற்றும் அண்ணனை தாக்கி சிறுமியை இரண்டாவது மாடிக்கு தூக்கிச் சென்று, பால்கனியில் இருந்து சாலையில் வீசியுள்ளனர். 

இதனால் படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிறுமியின் தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Mathura Girl Thrower form Balcony 24 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->