வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த பெண்ணின் சேலையை இழுத்து அட்டகாசம்.. பாஜக ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த பெண் வேட்பாளரின் சேலையை பிடித்து இழுத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரங்கள் என்பதால் வன்முறை சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை என்பதை போல சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில், பெண் வேட்பாளரின் சேலையை பிடித்து இழுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள லக்னோ லக்கிம்பூர் பகுதியில் சமாஜ்வாதி கட்சியினை சார்ந்த பெண் வேட்பாளர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த நிலையில், மனுதாக்கல் செய்ய வந்த பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகவே, பெண்ணுடன் வந்தவர்கள் மர்ம நபர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்றியுள்ளனர். இந்த விஷயத்திற்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும், பாஜக தொண்டர்களே இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும், பதவியாசை கொண்ட யோகியின் பின்தொடர்பாளர்களின் செயல் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வந்தாலும், வன்முறைகள் அதிகரித்துள்ளதாக அங்குள்ள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Local Body Election woman Resentment by BJP Workers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->