கங்கையின் மகளாக மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை.. உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


மரப் பெட்டியில் வைத்து ஆற்றில் விடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையானது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. 

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள குல்லு தாத்ரி வனப்பகுதி அருகேயுள்ள கங்கை நதியில், குழந்தையின் அழுகுரல் ஆனது கேட்டுள்ளது. தொழிலாளி ஒருவர் நதியில் மிதந்தபடி வந்த மரப்பெட்டியை கண்டு அதனை கரைக்கு எடுத்து வந்துள்ளார். 

கரைக்கு வந்து பெட்டியை திறந்து பார்க்கையில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக உள்ளூர் தெரிவிக்கையில், " இத்தனை வருடங்களாக இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது இல்லை என்றும், தற்போது பெண் சிசு ஒன்று கங்கையின் மகள் என்று எழுதப்பட்ட வாசகத்துடன் கண்டறியப்பட்டது எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது " என்றும் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Ganga Baby Rescued on River 16 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->