அரசு அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தாவிடில் சம்பளம் கட் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்தியாவை இரண்டு கொரோனா அலைகள் தாக்கியுள்ள நிலையில், விரைவில் மூன்றாவது கொரோனா பரவல் அலை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அவர்களின் பயம் காரணமாக சிலர் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் காண்பித்து வருகின்றனர். அரசு அதிகாரிகள், முன்களப்பணியாளர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் (Firozabad) மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது தொடர்பான உத்தரவில், " அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும். 

தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் " என்று தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை ஆட்சியர் வாய்மொழி உத்தரவாக பிறப்பித்துள்ளளதாக கூறப்படுகிறது. ஆட்சியரின் எச்சரிக்கையால் பல அரசு அதிகாரிகளும் தடுப்பூசி செலுத்த முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆட்சியரின் இந்த வாய்மொழி உத்தரவு ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும், மற்றொருபுறம் தடுப்பூசி செலுத்துவது என்பது விழிப்புணர்வு ஏற்பட்டு அனைவரும் பயம் இல்லாமல் செலுத்த வேண்டும். இது மிரட்டல் வகையை சார்ந்ததாக தோன்றுகிறது என எதிர்ப்பும் இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Firozabad District Collector Advice Govt Employees Inject Vaccine or Salary Cut


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->