130 அடி போர்வெல்லில் சிக்கிக்கொண்ட சிறுவனை பத்திரமாக மீட்ட அதிகாரிகள்.. தமிழகத்தை சார்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா காவல் எல்லைக்குட்பட்ட தாரிபோ கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் சிவா, மூடப்படாமல் விடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். 

திங்கட்கிழமை காலை 7 மணியளவில் 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில், பெற்றோர்கள் குழந்தையை தேடி காணாமல் பரிதவித்து இருக்கின்றனர். ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. 

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேசிய மீட்பு படை வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட 30 பேர் அங்கு விரைந்துள்ளனர். 

காவல்துறையினர் ஆழ்துளை கிணற்றுக்குள் மக்கள் நெரிசலால் மண் சரிவு ஏற்படாமல் இருக்க சுற்றி தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில், முதலில் குழந்தைக்கு ஆக்சிஜனை குழாய் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு, கேமரா மூலமாக சிறுவனின் நிலையை அறிந்துள்ளனர். 

கைகள் மேலே தூக்கப்பட்டு குழிக்குள் சிக்கிக் கொண்டிருந்த சிறுவனின் கையில் இலாவகமாக கயிற்றை மாட்டி, சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவனை வெளியே கொண்டு வந்துள்ளனர். பத்திரமாக மீட்கப்பட்ட சிறுவன் விரைந்து அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டு, மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனிராஜ் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Agra Child Rescue by Tamilnadu Native IPS Officer Muni Raj


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->