உபி., என்கவுண்டர்! பாஜக தலைவர் கொலை வழக்கு குற்றவாளி சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடபுடைய குற்றவாளி அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டே என்ற ஹனுமான் பாண்டே. பாண்டே மீது கொலை, கொள்ளை குற்றச்சாட்டுகள் உள்ளது. 

மேலும் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஜக தலைவர் கிருஷ்ணானந்த் ராய் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் ஹனுமான் பாண்டேவுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாரால் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உபி., லக்னோ சரோஜினி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாண்டே போலீசின் சிறப்புப்படையினரால் என்கவுன்ட்டர் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

முன்னதாக, பாஜக தலைவர் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்து போது, கொலையை நேரில் கண்ட சாட்சிகள் மாற்றி கூறவே குற்றம்சாட்டப்படட அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

up bjp leader murder case culprit encounter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->