முதலமைச்சரின் மகளை கடத்த போட்ட பிளான்!. அதிர்ச்சியில் போலீசார்!. - Seithipunal
Seithipunalடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது அலுவலகத்துக்கு கடந்த கடந்தவராம் "உங்கள் மகள் ஹர்ஷிதாவைக் கடத்தப் போகிறோம். அவரைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று எழுதி மின்னஞ்சல் வந்துள்ளது.

இதனையடுத்து டெல்லி போலீசார் ஹர்ஷிதாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், அந்த மின்னஞ்சலை யார், எங்கிருந்து அனுப்பியது என்று டெல்லி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிரட்டல் வந்த மின்னஞ்சல் குறித்த விவரங்களை முதல்வர் அலுவலக அதிகாரிகள், டெல்லி காவல்துறைக்கு அனுப்பி உள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவருக்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது 

English Summary

unknown person planned to kidnap CM daughter


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal