உலக ஆசிரியராக, நோபல் பரிசுக்கு, தேர்வு செய்யப்பட்ட குஜராத் ஆசிரியை – மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பெண்….! பாராட்டிய பிரதமர்….! - Seithipunal
Seithipunal


 

உலக அளவில், சிறந்த ஆசிரியர்களுக்கான, நோபல் பரிசு எனப்படும், உலக ஆசிரியர் விருது, கல்வித் துறையில், மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் பயனளிக்கும் விதமாக, சேவை செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, இந்த விருதுக்காக, 179 நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் ஆசிரியர்கள் பரிந்துரைக்கப் பட்டனர்.

அவர்களில் முதல் பத்து பேர் கொண்ட பட்டியல் தற்போது, வெளியாகி உள்ளது.

அந்த பத்து பேரில், குஜராத்தைச் சேர்ந்த ஆசிரியை, “ஸ்வருப் ராவல்” பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த தகவலை அவரிடம் தெரிவித்த போது, அவர் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றதாகக் கூறினார். அவரின் சிறந்த சேவைக்காக வழங்கப்படும் சிறந்த விருது என, இந்திய மக்கள் அனைவரும், அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவருக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.

“இந்தியாவின் பெருமையை, உலக அளவில் உயர்த்தி உள்ளீர்கள்” என்று வாழ்த்தி உள்ளார்.

இந்த விருது பெறும், ஸ்வரப் ராவல், முன்னாள் “மிஸ் இந்தியா” பட்டம் பெற்றவர். பள்ளி மாணவர்களுக்கான, பல்வேறு சேவைகளைச் செய்து வரும் ஸ்வருப் ராவல், குஜராத்தில் உள்ள லாவத் ஆரம்பப் பள்ளியில், வாழ்வியல் திறன்களைக் கற்பிக்கும் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

அடுத்த மாதம் துபாயில் நடைபெறும், உலக கல்வி மற்றும் திறன் அமைப்பு விழாவில், இந்த உலக ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

universal teacher award goes to Gujarat lady


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->