நமது நிறம், உணர்வு, உணர்ச்சி அனைத்தும் காவிதான்... கெத்துக்காட்டிய உத்தவ் தாக்கரே.. அதிர்ச்சியில் கூட்டணிக்கட்சிகள்.!!  - Seithipunal
Seithipunal


பால் தாக்கரே கொடுத்த வாக்குறுதியான " சிவசேனா கட்சியை சார்ந்தவரை முதலமைச்சர் ஆக்குவேன்" என்ற வாக்குறுதியை நிறைவேற்றியதற்கு, உத்தவ் தாக்கரேக்கு சிவசேனா கட்சியினர் பாராட்டு விழாவினை நடத்தியிருந்தனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பாந்திரா குர்லா மையத்தில் இருக்கும் எம்.எம்.ஆர்.டி.ஏ மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசினார். 

இதற்கு முன்னதாக வந்த ஜனவரி 23 ஆம் தேதியை நினைவில் வைத்து பார்க்கிறேன். ஜனவரி 23 ஆம் தேதி பால் தாக்கரேவின் பிறந்தநாள். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முதலவர் பதவியேற்ற நேரத்திலும், தற்போதுவரை பெரும் எந்த ஒரு பாராட்டுகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் பாராட்டுகளை தொடர்ந்து ஏற்று கொண்டு வருகிறேன். 

இது எனக்கான பாராட்டுக்கள் அல்ல.. உங்களுக்கான பாராட்டுக்கள் ஆகும். எந்த ஒரு நேரத்திலும் சவால்களை கண்டு நான் அஞ்சியதும் இல்லை. எனக்கு உங்களது ஆதரவும், ஒத்துழைப்பும் கட்டாயம் தேவை. பிற ஆட்கள் மட்டுமல்லாது, நம்மோடு இருந்த நபர்கள் கூட நம்மீது நடத்தியிருந்த தாக்குதலையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளோம். 

கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து இந்துத்துவ கொள்கையை விட்டுவிட்டு நான் செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. கட்டாயம் நம்மை யாராலும் மாற்ற இயலாது. நமது பழைய அரசியல் எதிரியுடன், புதிய அரசியல் பாதையை மட்டும் தேர்வு செய்துள்ளேன். இதற்காக நான் எனது நிறத்தினை மாற்றவில்லை. 

இப்போதும் எப்போதும் நமது நிறம், உணர்வு மற்றும் உள்ளுணர்வு கவிதான். முதல்வர் பதவியை நான் ஏற்பேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uddhav thakre speech about Hinduthuva and kavi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->