இது வெறும் சோதனைதான்.. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. முதல்வர் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா காரணமாக மகாராஷ்டிரா கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்டுபாடு இல்லாத பகுதிகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அம்மாநில முதல்வர் மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். 

இது குறித்து பேசுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இது "மிஷன் பிகின் அகெய்ன்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் துவங்கும் நோக்கத்தை கொண்டது. இதன் மூலமாக வரும் 5 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் இல்லாத இடங்களில் கடைகள், சந்தைகள், அலுவலகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தளங்கள் மற்றும் வணிக வளாகம், உணவகம் மற்றும் ஓட்டல்கள் மூடியே இருக்கும். கடைகள், சந்தைகள் மற்றும் அலுவலகம் திறக்க அனுமதி வழங்கியுள்ளது சோதனையின் அடிப்படையில் தான். இதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல்கலைக்கழக இறுதி தேர்வுகள் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துடன் பேசப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வாய்ப்புகள் கட்டாயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uddhav Thackeray speech about peoples safety


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->