புலம்பெயர் தொழிலாளர்களால் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி - உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


பால் தாக்கரே சிவசேனா கட்சியின் நிறுவனரான இருக்கையில் " மார்மிக் " என்ற வார இதழை துவங்கினார். இந்த இதழின் 60 ஆவது ஆண்டு விழா மும்பையில் நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். 

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், " மகாராஷ்டிரா மாநில மக்களுக்கான உரிமைகளை பெறுவதற்கு, போராட்டத்தின் மத்தியில் துவங்கிய சிவசேனா கட்சியின் இதழ் தான் மார்மிக். இந்த இதழ் விரைவில் டிஜிட்டல் வழியிலும் வெளியிடப்படும். ஓவிய கலைஞராக இருந்த எனது தந்தைக்கு பிரஸ் மிகப்பெரிய ஆயுதமாக இருந்தது. மகாராஷ்டிரா மக்களின் பிரச்சனை மற்றும் புலம்பெயர்ந்த நபர்களால் ஏற்பட்ட அநீதியையும் கேலி சித்திரம் மூலமாக அம்பலப்படுத்தி இருந்தார்.

இம்மண்ணின் மைந்தர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் பாடத்திட்டத்தில் மராத்தி போன்றவை கட்டாயமாக்கப்பட்டது. மார்மிக் தான் சிவசேனாவை உருவாக்கியது. சிவசேனா கட்சியின் மூலமாக உங்களுக்கு முதல்வர் கிடைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மராத்தி பேசும் மக்கள் வசித்து வரும் பகுதியை, மஹாராஷ்டிராவில் இணைக்கும் வரையில் மராட்டியம் என்பது முழுமை பெறாது " என்று கூறினார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uddhav Thackeray Speech about Maharashtra state Migrate worker


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->