நாம் ஆட்சிக்கு வந்ததும் நடப்பதை பாருங்கள்...! ஆரே விவகாரத்தில் உத்தவ் தாக்கரே ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி வனமானது உள்ளது. இந்த வனத்திற்கு அருகிலேயே ஆறே என்ற குடியிருப்பு பகுதியும் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் உள்ள நிலையில்., மும்பையில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் கட்டுமான பணிகளுக்கு மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் முடிவின் படி., சுமார் 2500 க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றுவதற்கு முடிவு செய்த மெட்ரோ நிர்வாகம் பணியை துவக்கிய நிலையில்., இந்த விஷயத்தை எதிர்த்து மும்பையில் இருக்கும் உயர் நீதிமன்றத்தில் வழக்கானது தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம்., மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

aarey forest,

நீதிமன்றத்தில் மனு தள்ளுபடியானதை தொடர்ந்து மெட்ரோ பணிகளை துவங்கிய மெட்ரோ நிர்வாகம்., மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடத்துவங்கியதை அடுத்து., சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். மேலும்., இந்த போராட்டத்தின் காரணமாக சுமார் 29 பேரை காவல் துறையினர் கைது செய்து இருந்தனர். 

இந்த சமயத்தில்., கைதான 29 பேரில் சிவசேனா கட்சியின் பெண் தலைவர் பிரியங்கா சதுர்வேதியும் இருந்ததால் பிரச்சனை அடுத்தடுத்து பெரிதானது. இந்த விஷயம் அடுத்தகட்ட போராட்டத்தை துவங்கிய நிலையில்., இந்த போராட்டத்திற்கு சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும்., நமது அரசு ஆட்சிக்கு வந்தவுடன்., மரத்தை வெட்ட சொன்னவர்கள் அனைவருக்கும் சிறப்பான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uddhav thackeray speech about aarey forest problem and support


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->