யாரும் எங்கேயும் செல்ல வேண்டாம்.. நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன்... உத்தவ் தாக்கரே நெகிழ்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மும்பை மராட்டியத்தில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்ல படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 

அதில், "வெளிமாநில தொழிலாளிகளின் தவிப்பு எனக்கு நன்றாக புரிகிறது. இருப்பினும் வைரஸ் தடுப்பு நடவடிக்கை மிகவும் முக்கியம். விபரீதத்தை உணராமல் வெளியேற நினைப்பது சரியானது அல்ல. வெளிமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து தரும். 

இங்கு இருக்கும் இடங்களிலேயே தங்கியிருங்கள். வெளியேற முயற்சி செய்யவேண்டாம். கரோணா வைரஸின் தாக்கம் வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது. எனவே அதன் தாக்கம் அதிகரிக்க நீங்களே காரணமாகி விடாதீர்கள். வலுவான காரணங்கள் இன்றி யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. 

எட்டு நாட்களாக முடங்கி கிடக்கும் மாநிலம் எஞ்சி இருக்கும் நாட்களையும் விரைவில் கடப்போம். போலீசார் மற்றும் அரசாங்கத்தை கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆளாகி விடாதீர்கள்." என்று எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uddhav Thackeray product other state peoples in Maharashtra


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->