கொந்தளித்த உத்தவ் தாக்கரே.. நீங்க அடிச்சா, பதிலுக்கு திரும்பி எந்திக்க முடியாத அளவு அடிப்போம்..! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.சி பிரசாத் லாட் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாஹிம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்போது, " நான் எப்போது மாஹிம் வந்தாலும் அதிக காவல்துறை பாதுகாப்பு போடப்படுகிறது. நாங்கள் சேனா பவனை தகர்த்துவிடுவோம் என சிவசேனா பயப்படுகிறது. நேரம் வரும் சமயத்தில் கட்டாயம் அதையும் செய்வோம் " என்று பேசினார். 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள உள்ளூர் வட்டாரங்களில் அதிகளவு பகிர்ந்து கொந்தளிப்பை ஏற்படுத்த, விபரீதத்தை புரிந்த பிரசாத் லாட் நான் சேனாவை இடிக்கும் வகையில் பேசவில்லை என்று விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு சமாளித்தார். 

இந்நிலையில், நேற்று ஒர்லி பகுதியில் நடைபெற்ற பி.பி.டி சீரமைப்பு திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, " மிரட்டும் வகையிலான பேச்சுக்களை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இவ்வாறு பேசுபவர்களுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் " என்று தெரிவித்தார். 

இதன்போது, தபாங் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள " அறைவதற்கு பயம் இல்லை " (தபாட் சே டர் நஹி லக்தா) என்று ஹிந்தி மொழியில் பேசினார். இதன்போது அங்கிருந்த அதிகாரிகள் முதல், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரை உத்தவ் தாக்கரே கோபத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டு அமைதியாக இருந்தனர்.

தொடர்ந்து பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, நீங்கள் தாக்கினால் பதிலுக்கு எழுந்து நிற்க முடியாத அளவு திருப்பி அடிப்போம். ஆதலால் எங்களை அறைவது போன்ற மற்றொரு சர்ச்சை பேச்சை பேச வேண்டாம். பேசவும் கூடாது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uddhav Thackeray Highly Angry and Warning to BJP Prasad Lad


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->