வெள்ளத்தில் மிதக்கும் டெல்லி.. முதல்வரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகராக டெல்லி இருந்து வருகிறது. டெல்லி மாநிலம் அளவில் சிறியதாக இருந்தாலும், அதன் மக்கள் தொகை என்பது மிகப்பெரியது. நாட்டின் தலைநகரில் பல்வேறு வளர்ச்சிக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இயற்கையின் வாழ்விடம் அழிக்கப்படும் போது, அது ஒருநாள் உன்னை வேட்டையாடும் என்பது டெல்லியிலும் தற்போது உறுதியாகியுள்ளது. 

இயற்கையின் மிகப்பெரிய கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மழை, மழையினால் உருவாகும் ஆறுகள், ஏரிகள் என நீர்நிலைகள் அழிக்கப்படும் போது, காத்திருந்து பார்க்கும் இயற்கை ஒருநாள் தனது வாழ்விடத்தில் நிலைகொள்கிறது. அதற்குள் மனிதர்கள் அங்கு குடியேறி எனது வீடெல்லாம் வெள்ளம் என ஆரம்பித்து வருகின்றனர். 

அப்படியொரு அவல நிலையை இன்று டெல்லியும் எதிர்கொண்டுள்ளது. டெல்லிக்கு பொதுவாக இருக்கும் பிரச்சனையாக மக்கள் தொகை, காற்று மாசு என இருந்து வந்த நிலையில், தற்போது மழைக்கால சீசன் தொடங்கி நேற்று பெய்த மழையில் டெல்லியின் பெரும்பாலான நகரங்கள் நீரின் பிடியில் இருக்கிறது. 

டெல்லியின் முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், இயற்கை விஷயத்தில் பல மாநிலங்களில் எடுத்த முன்னெடுப்பு நடவடிக்கைகள் எப்படி பொய்த்துப்போனதோ, அதே பாணியில் டெல்லியிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது. 

மேலும், டெல்லியை இங்கிலாந்தின் இலண்டன் நகரம் போல மாற்றுவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாகவும், பெய்த மழையில் பாலத்தின் மேலே இருந்து நீர் அருவி போல கொட்டுகிறது எனவும் நெட்டிசன்கள் தங்களின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து #DacoitsOfDelhi என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டர் தலத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter Handlers Trend about Delhi Dacoits CM Arvind Kejriwal 7 Sep 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->