அமெரிக்கா ரிட்டனின் ஓரினசேர்க்கை குடித்தனம்.. கேள்விக்குறியாகிய இளம்பெண் வாழ்க்கை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தை சார்ந்தவர் பாஸ்கர் (வயது 30). இவர் அமெரிக்காவில் பணியாற்றி, அங்குள்ள குடியுரிமை வைத்துள்ளார். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்த பெற்றோர்கள், குண்டூரை சார்ந்த 25 வயது பெண்மணியை நிச்சயம் செய்துள்ளனர். 

இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் ரூ.50 இலட்சம் ரொக்கம் மற்றும் 70 சவரன் நகைகள் பெண் வீட்டாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

திருமணம் முடிந்ததும் மணமகள் முதலிரவு அறைக்குள் சென்ற நிலையில், அமெரிக்கா ரிட்டன் குறட்டை விட்டு உறங்கியுள்ளது. மேலும், தனக்கு உடல் அலுப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளான். சரி திருமண களைப்பாக இருக்கு என்று எண்ணி பெண்ணும் அமைதிக்காக்க, இப்படியாக இரண்டு மாதங்கள் கழிந்துள்ளது. 

இதனால் விரக்தியடைந்த பெண்மணி அமெரிக்கா மாப்பிள்ளை குறித்து தனது தோழிகள் மூலமாக விசாரணை செய்ய, அரசல் புரசலாக ஓரினசேர்க்கை விஷயம் தெரியவந்துள்ளது. கணவனின் மீது கொண்ட நம்பிக்கையால் முதலில் பெண் நம்பாமல் இருந்த நிலையில், தாம்பத்திய வெறுப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து பெண் தனது பெற்றோருக்கு விஷயத்தை தெரியப்படுத்த, இருவீட்டாரும் பஞ்சாயத்து கூட்டியுள்ளனர். இதில், பாஸ்கரை கண்டித்து கேட்ட பின்னர் பெரும் அதிர்ச்சி தகவலாக, தான் அமெரிக்காவில் ஆணுடன் 4 வருடமாக குடித்தனம் நடத்தி வருகிறேன் என்றும், ஆண்களை கண்டால் மட்டுமே தனக்கு மோகம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். 

இதனைக்கேட்டு கோபமடைந்த பெண்மணி தாய்வீட்டிற்கே சென்ற நிலையில், சமாதான புறாவை பறக்கவிட்ட பாஸ்கர், நான் உன்னை அமெரிக்கா அழைத்து செல்கிறேன் என்றும், நீ எனக்கும், எனது அமெரிக்க ஆண் காதலருக்கும் மனைவியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளான். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, குடும்பத்தினருடன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் அமெரிக்க ரிட்டன் பாஸ்கர் மற்றும் அவனது குடும்பத்தினரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெண்ணிற்கு திருமணம் செய்கையில் பெற்றோர்கள் அனைத்துவிதமான தகவலையும் ஆராய வேண்டும். இதனைப்போன்று, தனக்கு விருப்பம் இல்லை என்று நினைத்தால் பெற்றோர்களிடம் விஷயத்தை கூற வேண்டும் அல்லது திருமணம் வேண்டாம் என்று பெற்றோர்களிடம் புரிய வைத்திருக்க வேண்டும். மாறாக பெண்ணின் வாழ்க்கையை ஏமாற்றி, அவர்களின் உணர்வை புண்படுத்திய கொடூரனிற்கு எதிர்காலம் எந்த அளவில் இருக்கும் என்பதை அவனது விதியே தீர்மானம் செய்யும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Truth about America Return Andra Pradesh youngster like gay after his marriage complete


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->