நாடாளுமன்றத்திற்கு சைக்களில் வந்த எம்பிக்கள்! வளாகத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


மழைகாலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளே பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வருகை தந்தனர். 

கொரோனா ஊரடங்கில் மாற்றம் இல்லாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை, கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்களால் படிப்படியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

விலையை குறைக்க முன்வராத மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று மழைகாலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதல்நாளான இன்று பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.

மேலும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாதாகைகளை தங்கள் உடம்பில் கட்டிக்கொண்டு, நாடாளுமன்ற நுழைவு வாயிலுக்கு வந்த அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களை போலவே தமிழகத்தின் திமுக எம்பிக்களும் போராடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு சமூக ஊடகங்களில் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trinamul Congress MPs came in bicycle to parliament for oppose fuel prices


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->