பாஜக  vs காங்கிரஸ்-ஜனதாதளம்கூட்டணி வெற்றி வாய்ப்பு யாருக்கு? இன்று பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் முயதலமைச்சர்  குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே இன்னல்களை சந்தித்து வருகிறது.இதில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருவதால் சிக்கல்களை சந்தித்து வருகிறது.

பாரதீய ஜனதா, குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்காக அவ்வப்போது காய்களை நகர்த்தி வருவதாலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முதல்-மந்திரி குமாரசாமி எப்போதும் மிகுந்து எச்சரிக்கையுடனேயே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை தீர்மானம் நடக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி முதலமைச்சர் குமாரசாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதற்காக காலை 11 மணிக்கு சட்டசபை கூடுகிறது. 

குமாரசாமி தாக்கல் செய்யும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது முதலில் உறுப்பினர்கள் விவாதம் நடைபெறும். அதன்பிறகு குமாரசாமி பதில் அளித்து பேசுவார். இதில் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபை

காங்கிரஸ்-ஜனதாதளம் கூட்டணிக்கு தற்போதைய நிலவரப்படி ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரின் ஆதரவையும் சேர்த்து மொத்தம் 117 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. 105 உறுப்பினர்களை கொண்ட பாரதீய ஜனதாவுக்கு இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பதால், அதன்பலம் 107 ஆக உயர்ந்து இருக்கிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today's bjp party vs kurasamy competition today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->