இரண்டு நாள் ஆகுமாம் தரிசனத்துக்கு.. வரிசைகட்டி நிற்கும் பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏரானமான பக்தர்கள் குவிந்தனர். ரூ. 300 சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் என எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமே காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து, வைகுண்ட காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பி பக்தர்கள் ரிங் ரோடு வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் தரிசிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

திருப்பதியில் நேற்று 83,422 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில், 50,100 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். நேற்று மட்டும் ரூ.4.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து வருகின்ற 21-ம் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Temple rush for leave days


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->