ஹிந்தி பாடலை பாடி, நெட்டிசன்களிடம் சிக்கிய திருச்சி சிவா.. ஊருக்கு தான் உபதேசம்.! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவையின் பதவிக் காலத்தை நிறைவு செய்த குலாம்நபி ஆசாத் பிரிவு உபச்சார விழா நடத்திய தமிழக எம்பி திருச்சி, சிவா ஹிந்தி காதல் பாடல்களைப் பாடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பியாக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவி காலம் நிறைவடைந்து. இதனைத்தொடர்ந்து அவருக்கு காங்கிரஸ் திருச்சி எம்.பி சிவா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஒரு பிரிவு உபச்சார விழா நடத்தி உள்ளார். 

இந்த விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முரளிதரன், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று உள்ளனர். அந்த விழாவில் பங்கேற்றவர்களை குஷிப்படுத்தும் விதமாக இசை கச்சேரி நடத்திய திருச்சி சிவா, இந்திப் பாடலைப் பாடி இருக்கிறார். 

கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான அமிதாப்பச்சனின் கபி கபி தில்லு மே என்ற இந்தி பாடலில் துவங்கி, பல காதல் இந்திப் பாடல்களை பாடியுள்ளார். முன்னதாக, மத்திய அரசு இந்தியை திணிக்க நினைக்கிறது என்று கூறி, ஹிந்தி தெரியாது போடா என்று சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த இசைக்கச்சேரி குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

புரட்சியாக இருந்தாலும் சரி, உபதேசமாக இருந்தாலும் சரி அது ஊருக்குத்தான். உள்ள வீட்டில் உணவருந்த வேண்டும் என்பதால் வாயை குறைத்து தான் பேச வேண்டும் என்பதை போல அமைந்துள்ள எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் இணையதள விமர்சகர்கள்.

கற்றுக்கொள்வதில் குற்றமில்லை, தனது தாய்மொழி மீது உறுதியாகவும், நேசத்துடன் இருக்க வேண்டும் என்பதே நாம் அறிய வேண்டியது. அதே நேரத்தில் ஹிந்தி கட்டாயம் என திணிப்பதும் தவறானது. அது எதிர்க்கப்பட வேண்டிய விஷயமும் கூட.. உள்ளூரில் இந்தி எதிர்ப்பு பேசியவர்கள் எல்லாம், பிழைப்பிற்காக சூழ்நிலையால் வடமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று பிற 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirchy Siva MP Hindi Song Singing Video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->