ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இரயில் இரத்து.. இரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்தது. இதனால் மார்ச் மாதம் இறுதியில் அமலான ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கால அட்டவணைப்படி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில்கள், ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், 01.07.2020 முதல் 12.08.2020 வரையிலான பயண தேதிக்கான வழக்கமான நேர 
கால அட்டவணைப்படி இயக்கப்படும் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெயில் / எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் சேவைகள் உள்ளிட்ட வழக்கமான நேர அட்டவணை பயணிகள் சேவைகள் 12.08.2020 வரை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Till August Month train Cancelled in India Announced By Railway ministry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->