டிக்-டாக் செய்து கோர விபத்தில் சிக்கிய மூன்று இளஞர்கள்! - Seithipunal
Seithipunal


பெங்களூர் ஹெட்ஜ் நகரை சேர்ந்தவர்கள் அப்தாப்ஷெரீப் (19), முகமது மாடின் (23). இவர்கள் இருவரும் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த தங்களது நண்பரான ஜபியுல்லாகானை சந்தித்து பேசி உள்னனர். இதற்கு பின் மூவரும் சேர்ந்து சன்ன சந்திரா மற்றும் யெலஹங்கா இடையேயான ரெயில்வே தண்டவாள பகுதியில் நின்று டிக்-டாக் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.

ஜபியுல்லா கான் தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருக்க மற்ற இரு நண்பர்களும்  ‘டிக்-டாக்‘ வீடியோவுக்காக நடித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் இவர்கள் மூவர் மீதும் மோதியது.

இந்த விபத்தில், அப்தாப்ஷெரீப், முகமது மாடின் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜபியுல்லா கான் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவல்களின்படி, சம்பவம் நடப்பதற்கு 30 நிமிடத்துக்கு முன் தான் அந்த வழியாக ஒரு சரக்கு ரெயில் சென்றுள்ளது. அதற்கு பிறகு பயணிகள் ரெயில் வந்துள்ளது. அப்போது நீண்ட தூரத்தில் இருந்த இளஞர்களை பார்த்த லோகோ பைலட் விசில் ஊதி எச்சரித்த உள்ளார். ஆனால் அதை இளஞர்கள்   கவனிக்காமல் டிக்-டாக்கில் மூழ்கி இருந்ததால் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tik tok accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->