இந்த வாரம், மோடியின் வாரம்.! பாஜக அமைச்சர்கள் கொண்டாட்டம்..! - Seithipunal
Seithipunal


பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்திய பிரதமர் மோடி பிறந்த நாள் வரும் 17ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக இன்று முதல் சேவை வாரம் கடைப்பிடிக்கிறது.

இதைத் தொடங்கி வைக்கும் வகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பழங்கள் அடங்கிய முடிப்புகளை வழங்கினார்கள்.

அதன் பின்னர் அவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியிலும் ஈடுபட்டார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தேசத்திற்காகவும், ஏழைகளுக்காகவும் அர்ப்பணித்த பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, சேவை வாரம் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this week for prime minister modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->