ஒடிசாவில் கொரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பிறகும் 30 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை! பள்ளி கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பிறகும் 30 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் பிபி சேதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்பித்து வந்தனர்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மாணவ மாணவிகள் நேரடி வகுப்புகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நேரடி வகுப்பு தொடங்கிய நிலையிலும் சுமார் 30 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்கிய பள்ளிகளின் தினசரி வருகை பதிவில் 70 சதவீத மாணவர்கள் மட்டுமே நேரடி வகுப்பிற்கு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு வராத மாணவர்களை திரும்ப அழைத்து வருவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை செயலாளர் பிபிசி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirty percent Student did not return school


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->